Author Topic: பிறருடைய சிகரெட் புகையால் மரணமடைபவர்கள் 6 லட்சம் பேர்! அதிர்ச்சி தகவல்!  (Read 5682 times)

Offline Yousuf

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமலேயே பிறருடைய சிகரெட் புகையால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் இதற்கு ”பேசிவ் ஸ்மோக்கிங்” என்று பெயர்.

பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின் படி குழந்தைகளில் 40 சதவீதத்தினரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இது போன்ற பிறரது புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டொன்றிற்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில்

    இருதய நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 379,௦௦௦

    கீழ் மூச்சுக்குழல் நோயால் மரணமடைவர்கள் எண்ணிக்கை 1,65,௦௦௦

    ஆஸ்துமா நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 36,0௦௦

    நுரையீரல் புற்று நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை 21,400

என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


உலகில் நிகழும் மரண விகிதத்தில் பிறரது புகைக்கு மரணமடைபவர்களின் பங்களிப்பு 1% என்று லான்செட் ஆய்வறிக்கை கூறுகிறது.

    51 லட்சம் பேர் ஆண்டு முழுதும் உலக அளவில் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர் என்றால் அதில் 6,03,000 பேர் பிறரது புகைப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு பிறரது புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 1,65,000 குழந்தைகள் மரணமடைவதாக உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.

பெற்றொர்களுக்கு புகைப்பழக்கம் இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் தன்மை அபாயகரமாக உள்ளது. அதாவது காது தொடர்பான நோய்கள், நிமோனியா, ஆஸ்துமா, பிரான்க்கைட்டீஸ் ஆகிய நோய்கள் தாக்குவது இயல்பாகி வருகிறது என்கிறது லான்செட் புள்ளிவிவரம்.

பிறரது புகைப்பழக்கத்தினால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவும் ஆசியாவும்தான் முன்னிலை வகிக்கின்றன.

பிறரது புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் பெண்களே அதிக அளவில் மரணம் அடைவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
« Last Edit: November 01, 2011, 12:05:33 PM by Yousuf »

Offline RemO



Offline Global Angel