தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைசூர் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
புளி சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் போட்டு மொறுமொறுவென்று வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு, மைசூர் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து புளிச்சாற்றினை ஊற்றி, தீயை குறைவில் வைத்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து, வரமிளகாய் வதக்கிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்றி, கடுகு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதனை தூக்கி குக்கரில் ஊற்றி கிளறினால், சூப்பரான சேனைக்கிழங்கு கூட்டு ரெடி!!!
இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்