தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, சாதம் மற்றும் பட்டாணி போட்டு கலந்து, உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் அரைக்கும் போது பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்க்காமல், அவற்றை நேரடியாக எண்ணெயில் போட்டும் தாளித்துக் கொள்ளலாம்.