என்னென்ன தேவை?
பன்னீர்-1/4 கிலோ
கொண்டைக்கடலை மாவு-1கப்
அரிசி மாவு-2டீஸ்பூன்
சோளம் மாவு-2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
சமையல் சோடா-சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
எப்படி செய்வது?
கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய்த்தூள், ஆப்பச்சோடா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து மூடி வைத்து அதன் மேல் பன்னீர் துண்டுகளை சில நிமிடங்கள் வைக்கவும். பின்னர் துண்டுகளாக்கப்பட்ட பன்னீரை எடுத்து பிசைந்து வைத்துள்ள மசாலாவை பன்னீர் மேல் தடவ வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து மசாலா தடவிய பன்னீரை எண்ணெயில் போட்டு வறுக்கவும். இதை பரிமாறும் போது ஒரு கப் டீயுடன் தக்காளி கெட்ச்அப் அல்லது பச்சை சட்னி வைத்து பரிமாறலாம்.