Author Topic: ~ பளிச்சென்ற முகத்திற்கு ஏற்ற பீச் ஃபேஸ் பேக்!!! ~  (Read 614 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பளிச்சென்ற முகத்திற்கு ஏற்ற பீச் ஃபேஸ் பேக்!!!



முகம் நன்கு மென்மையோடு, அழகாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் மாஸ்க் தான் பெஸ்ட். ஏனெனில் பழங்களில் நிறைய வைட்டமின், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு மட்டும் நல்லதல்ல. சருமத்திற்கும் தான். அத்தகைய ஃபேஸ் மாஸ்க் செய்ய பயன்படும் பழங்களில் பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, வாழைப்பழம் மற்றும் பீச் போன்றவை முக்கியமானவை. இப்போது இதில் பீச் பழத்தை எடுத்துக் கொண்டால், அதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு அழகைத் தருவதிலும், முதுமை தோற்றம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. ஆகவே அந்த பீச் பழத்தை வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!

பீச் பேக் : வறண்ட சருமத்திற்கு இந்த பழம் மிகவும் சிறந்தது. ஆகவே இத்தகைய சருமம் உள்ளவர்கள், இந்த பழத்தின் ஒரு துண்டை வைத்து, முகத்தில் 10-15 நிமிடம் வரை தேய்த்து மசாஜ் செய்து, பத்து நிமிடத்திற்குப் பிறகு ஈரமான துணியால் துடைத்து விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அர
ிப்பு போன்றவை வராமல் இருக்கும்.

பீச் மற்றும் முட்டை ஃபேஸ் பேக் : முகத்தை அழகு செய்வதற்கு ஸ்பா சென்று பணத்தை வீணாக செலவழித்து வருவதை விட, வீட்லேயே இந்த ஃபேஸ் பேக்கை செய்து வந்தால், பணம் மிச்சமாவதோடு, முகமும் அழகாக மாறும். அதற்கு பீச் பழத்தை எடுத்துக் கொண்டு, அதில் இருக்கும் விதையை நீக்கி, முட்டையின் வெள்ளை கருவை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாக பளிச்சென்று பொலிவுறும்.
பீச் மற்றும் தக்காளி பேக் : தக்காளியில் அதிகமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது சருமத்திற்கு இளமைப் பொலிவைத் தருகிறது. மேலும் தக்காளியில் இருக்கும் ஜூஸ், சருமத்தில் இருக்கும் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை தருகிறது. அதிலும் இந்த தக்காளியை எந்த காய்கறி அல்லது பழத்துடனும் சேர்த்து, ஃபேஸ் பேக் செய்யலாம். அதிலும் பீச் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கிவிடும்.

பீச் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் : எலுமிச்சை சருமத்திற்கு மிகவும் சிறந்த, சருமத்தில் இருக்கும் தூசிகளை நீக்குவதோடு, முகப்பருக்களையும் நீக்கும். ஆகவே பீச் பழத்தை (விதையை நீக்கி) நன்கு மசித்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி, நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதனால் முகம் புத்துணர்ச்சியுடனும், சுருக்கமின்றியும் காணப்படும்.

பீச் மற்றும் தேன் : தேன் ஒரு இயற்கையான சருமத்திற்கு அழகைத் தரும் பொருள். இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் சருமத்திற்கு நிறம், அழுக்குகளை நீக்குதல், ஈரப்பசை போன்றவற்றை தருகிறது. அதற்கு நன்கு கனிந்த பீச் பழத்தை அரைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி பேஸ்ட் செய்து முகத்திற்கு தடவ வேண்டும். வேண்டுமென்றால், அதோடு சிறிது எலுமிச்சை சாற்றையும் ஊற்றிக் கொண்டு, முகத்திற்கு தடவி, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் பிம்பிள் அல்லது முகப்பரு நீங்கும்.
ஆகவே மேற்கூறிய ஃபேஸ் பேக்களை வீட்டில் இருக்கும் போது செய்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெற்று, பளிச்சென்று மின்னும்.