Author Topic: செட்டிநாட்டு புடலங்காய் பாசிபருப்பு கூட்டு  (Read 511 times)

Offline kanmani

பாசிப் பருப்பு        & 50 கிராம்
புடலங்காய்        & ஒரு கப் சதுரமாக நறுக்கியது
மஞ்சள்தூள்        & ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம்    & சிறியதாக 1 (பொடியாக நறுக்கியது)
சாம்பார் பொடி    &  ஸ்பூன்
உப்பு             & தேவைக்கேற்ப
தாளிப்பவை        & மேலே கூட்டுக்கு கூறிய மாதிரியே
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 4 டம்ளர் சுடவைத்து அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு பாதி வேக்காடு வெந்ததும் அதில் காய், வெங்காயம், சாம்பார் பொடி சேர்க்கவும்.

காய் வெந்ததும் உப்பு சேர்த்து, 10 நிமிடங்கள் கழித்து வாணலியில் மேற்கூறியவற்றைத் தாளித்து கூட்டில் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கவும்.

பாட்டிலில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் கல் உப்பைப் போட்டு கரைத்து வைத்துக் கொண்டால் சமையலுக்கு தேவைப்படும் போது உபயோகிக்கலாம். (இவ்வாறு செய்தால் கல், மண் அடியில் தங்கிவிடும்)

மேலும் தீக்காயங்கள் ஏற்பட்டால் இதைப்போடுவதால் தோலின் நிறமும் மாறாமல் கொப்புளங்களும் ஏற்படாது பாதுகாக்கலாம்.