Author Topic: செட்டிநாட்டு கோவைக் காய் மசாலா  (Read 469 times)

Offline kanmani

கோவைக்காய்        &  கிலோ
பூண்டு             & 2 பற்கள்       
சின்ன வெங்காயம்    & 2
தேங்காய்         &  மூடி (4 ஸ்பூன்)
வரமிளகாய்        & 12
சோம்பு            & ஒரு ஸ்பூன்& தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
உப்பு             & தேவைக்கேற்ப   
தாளிப்பதற்கு:
எண்ணெய்        & 50 மில்லி
சோம்பு            &  ஸ்பூன்
கடுகு            & ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை        & ஒரு ஆர்க்
கோவைக் காயை நன்கு அலசி எடுத்து வளைவான வில்லைகளாக (மெல்லிய தகடுகளாக) நறுக்கவும். அரைத்தவற்றை அதில் போட்டு 10 நிமிடங்கள் பிசறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிப்பவற்றைப்போட்டு சிவந்ததும், காய் பிசறியதை அதில் சேர்த்து நன்கு  கிளறி, வெந்ததும் (பொன்னிறமாக வெந்ததும்) வாணலியிலிருந்து எடுத்து விடவும்.

சாம்பார் செய்யலாம்கத்தரிக்காய் மாதிரி பொரியல் செய்யலாம்.வாயில் புண் ஏற்பட்டிருந்தால் நல்லெண்ணெயில் 3 அல்லது 4 ஸ்பூன் எடுத்து, படுப்பதற்கு முன்பு வாயில் ஊற்றி கொப்பளித்து(5 நிமிடம்) பின் துப்பி விட்டு வாயைக் கழுவாமல் படுக்கைக்குச் சென்றால் காலையில் வாயிலிருந்த புண்ஆறி இருக்கும். (இவ்வாறு ஓரிரு நாட்கள் செய்யவும்).