கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
சௌ சௌ - ஒன்று
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சௌ சௌவை தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். விதையை நீக்கிவிடவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சௌ சௌ துண்டுகளை மாவுக்கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான சௌ சௌ பஜ்ஜி தயார்.
சௌ சௌ துண்டுகளை கிச்சன் டவலில் ஒற்றிவிட்டுத் தோய்த்தால் மாவுக்கரைசல் வழுக்காமல் பிடிக்கும்.