அழகு என்று வரும் போது அதில் நகங்களும் அடங்கும். ஆனால் பெரும்பாலானோரின் நகங்கள் பொலிவிழந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிலும் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது அடர் நிற நெயில் பாலிஷ்களை நீண்ட நாட்கள் நகங்களில் வைத்திருந்தாலோ, நகங்கள் பொலிவிழந்து காணப்படும். சில சமயங்களில் மஞ்சள் காமாலை இருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்து, நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அப்போது நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நம்முடன் பழகுபவர்களின், மனதில் நம்மைப் பற்றிய ஒருவித கெட்ட எண்ணத்தை உருவாக்கிவிடும். இதில் உள்ள பெரிய சலால் என்னவென்றால், மஞ்சள் நிறத்தில் உள்ள நகங்களை எளிதில் வெள்ளையாக்குவதென்பது மிகவும் கடினம். ஆனால் ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு நகங்களை பராமரித்தால், எளிதில் வெண்மையாக்க முடியும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும். குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பால்
பாலில் நகங்களை 15 நிமிடம் ஊற வைத்து, ஈரமான துணி கொண்டு துடைத்து விட்டு, உலர வைக்க வேண்டும். இந்த செயலில் நல்ல பயன் கிடைப்பதற்கு, தொடர்ந்து 2 வாரங்கள் செய்ய வேண்டும்.
பொய்ப்பல் மாத்திரைகள்
தாத்தா, பாட்டிகள் பயன்படுத்தும் பொய்ப்பல் மாத்திரைகளும், மஞ்சள் நிற நகப் பிரச்சனைகளைப் போக்கும். அதற்கு 2 பொய்ப்பல் மாத்திரைகளை வெதுவெதுப்பான நீரில் கரைய வைத்து, அந்த நீரில் நகங்களை 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை 20 நாட்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு
சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடில், 2 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அந்த கலவையை காட்டன் கொண்டு நகங்களில் தேய்த்தால், மஞ்சள் கறை நீங்கிவிடும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் பற்களில் உள்ள கறைகளை மட்டுமின்றி, நகங்களில் உள்ள கறைகளையும் போக்க வல்லது. எனவே டூத் பேஸ்ட்டை கறை படிந்த நகங்களில் தேய்த்தால், நகங்களில் வெண்மையாக ஜொலிக்கும்.
வினிகர்
வினிகர் மற்றும் லிஸ்டரினை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அந்த கலவையை காட்டனில் நனைத்து, நகங்களில் மசாஜ் செய்தால், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பொலிவுடன் இருக்கும்.
ஆலிவ் ஆயில்
பொதுவாக ஆலிவ் ஆயில் சருமம் மற்றும் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை போக்க வல்லது. அத்தகைய ஆலிவ் ஆயில், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் ஏற்றது. ஆனால் இந்த முறையில் நகங்களில் உள்ள கறைகள் நீங்க சற்று நாட்கள் ஆகும். இருப்பினும், இது மிகவும் சிறந்த முறை. அதற்கு வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சிறிது உப்பு சேர்த்து, அதில் நகங்களை ஊற வைக்க வேண்டும்.
ஒயிட்னிங் பென்சில்
நகங்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்குவதற்கு, நெயில் ஒயிட்னிங் பென்சிலையும் பயன்படுத்தலாம். ஆனால் இதனை அதிகம் பயன்படுத்தினால், நகங்களில் விரிசல் ஏற்படுவதோடு, உடைய ஆரம்பிக்கும்.
பேஸ் நெயில்
பாலிஷ் நியூட் அல்லது பேஸ் நெயில் பாலிஷை, வேறு எந்த ஒரு நெயில் பாலிஷ் போடும் முன்னும் போட்டுக் கொண்டால், நகங்கள் மஞ்சளாவதைத் தடுக்கலாம். குறிப்பாக அடர் நிற நெயில் பாலிஷ் போடும் போது, இவ்வாறு செய்ய வேண்டும்.