Author Topic: ஷாஹி மட்டன் குருமா  (Read 410 times)

Offline kanmani

ஷாஹி மட்டன் குருமா
« on: July 18, 2013, 11:25:05 PM »
தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம் (எலும்பில்லாதது)
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பால் - 1 டேபிள் ஸ்பூன்
 ப்ரஷ் க்ரீம் - 1 கப்
பாதாம் பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
 தயிர் - 1/2 கப்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
 கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 1-2 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் குங்குமப்பூவை பாலில் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு, அதில் தயிர், மல்லி தூள், பாதாம் பேஸ்ட், வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு மணிநேரம் கழித்ததும், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, 20 நிமிடம் மசாலா மட்டனில் ஒட்டி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.

பிறகு மிளகு தூள், கரம் மசாலா, பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து ப்ரஷ் க்ரீமை பொளலில் போட்டு அடித்துக் கொண்டு, மட்டனுடன் சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

பின் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, மூடி வைத்து தீயை குறைவில் வைத்து, மட்டன் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

(ஒருவேளை தண்ணீர் போதவில்லையெனில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.) இப்போது சுவையான ஷாஹி மட்டன் குருமா ரெடி!!!

இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி சாதத்துடன் பரிமாறினால், அருமையாக இருக்கும்.