காலை எழுந்ததும்
ஒலிக்கும் சேவல்
சத்தம் இங்கு இல்லை...
வெயில் வரும் வரை
தூங்கும் தூக்கமும்,
அம்மாவின் அதட்டல்
பேச்சு இங்கு இல்லை
ஆசையாய்
ஆட்டம் போட்ட
ஆலமர ஊஞ்சல்
இங்கு இல்லை....
எங்கு திரும்பினாலும்
தெரியும் பசுமை இங்கு
இல்லை.....
அம்மாவின் கையால் பிடித்து
கொடுத்த நீலாசோறு
நினைத்தாலும் இங்கு இல்லை....
பொங்கல் தீபாவளி
கொண்டாட்டங்கள்
எல்லாம் அங்கு போல
இங்கு இல்லை...
எங்கள் அத்தனை
சந்தோசங்களையும்
இழந்து பணம் தேடும்
இயந்திர வாழ்க்கை
தான் இங்கு...
நம் மண்ணை விட்டு
நாம் எங்கு
எதற்காக சென்றாலும்
அனாதை தான்.......
இளைஞனே!!!
உன் மண்ணிலேயே
பிழைக்க பார்....
அந்நிய நாட்டில்
அடிமை வாழ்க்கையில்
சிக்கி கொள்ள ஆசைபடாதே!!!!!