Author Topic: கவிதைகள்  (Read 1100 times)

Offline Maran

கவிதைகள்
« on: July 18, 2013, 12:19:30 AM »




« Last Edit: November 06, 2016, 10:54:36 AM by Maran »

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #1 on: July 18, 2013, 12:45:24 AM »
மற்றவரின்

ஏழைப்பார்வையை தடுக்க
போலி உடைகளையும் ....

ஏளனப்பார்வையை தடுக்க
போலி புன்னகையும் ...

ஏமாற்றுப்பார்வையை தடுக்க
போலி வாழ்கையையும் ...

வாழும் இன்றைய
போலி மனிதனாகும் நான்...

நிம்மதியை மட்டும்
நிஜமாய் தேடுவதெப்படி .!..!!


- Maran

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #2 on: July 19, 2013, 07:56:45 PM »
முரன்...

ஓயாமல்
அலைகள் உழைக்கிறது
ஓய்வு எடுப்பதோ
கரையோரம்
மனிதன் .
« Last Edit: July 28, 2013, 10:12:38 AM by Maran »

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #3 on: July 28, 2013, 10:11:18 AM »
முரண்பாடு

பஸ்ஸில் பார்ததும்
பெரியப்பா கேட்டார்
பார்த்து எவ்வளவு நாளாச்சு
துரும்பா எளச்சிட்டியே?
இறங்கி வருகையில்
எதிரே இருந்தவரை
மிதித்து விட்டேன்
மிளா மாதிரி இருக்கியே
பார்த்து வரக் கூடாதா?
பதில் என்ன சொல்ல
பத்து நிமிடத்தில் ஏற்படும்
இந்த மாற்றத்திற்கு .....

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: கவிதைகள் - மாறன்
« Reply #4 on: August 02, 2013, 08:45:00 PM »
மனிதனும் ஒழைத்து  களைத்து  தான் எப்பவாவது கரையோரம்  இளைபாரறான் மாறா நல்லா இருக்கு கவிதை
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #5 on: August 04, 2013, 05:50:53 PM »
ஏரியில் ஒருவன் !

உட்காரப்

புல்வெளி.

எதிரே

நீர்வெளி.

நீர்மேல் எண்ணெயாய்

சூரியன் .

பால் சொட்டுகளாய்

பறவைகள் .

முட்டாமல் மோதாமல்

இணக்கமாய் காற்று .

தூரத் தூர ரயிலோசைக்கும்

செவிக் கூசும் நிசப்தம் .

.......................................

..........................

எல்லாம் தவிர்த்து

கவனமாய் காத்திருக்கிறான்

கரையில் ஒருவன் .

தொண்டையை கிழித்து

கண்ணைத் துளைத்த

தூண்டில் முள்ளுடன்

துடிக்கும் ஒரு

மீனைக் காணும் ஆவலுடன் .
« Last Edit: August 04, 2013, 06:23:25 PM by Maran »

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #6 on: August 24, 2013, 09:42:56 PM »



« Last Edit: November 11, 2016, 10:05:06 PM by Maran »

Offline kanmani

Re: கவிதைகள் - மாறன்
« Reply #7 on: August 24, 2013, 10:37:10 PM »
மற்றவரின்

ஏழைப்பார்வையை தடுக்க
போலி உடைகளையும் ....

ஏளனப்பார்வையை தடுக்க
போலி புன்னகையும் ...

ஏமாற்றுப்பார்வையை தடுக்க
போலி வாழ்கையையும் ...

வாழும் இன்றைய
போலி மனிதனாகும் நான்...

நிம்மதியை மட்டும்
நிஜமாய் தேடுவதெப்படி .!..!!

---------------

எல்லாம் தவிர்த்து

கவனமாய் காத்திருக்கிறான்

கரையில் ஒருவன் .

தொண்டையை கிழித்து

கண்ணைத் துளைத்த

தூண்டில் முள்ளுடன்

துடிக்கும் ஒரு

மீனைக் காணும் ஆவலுடன் .


nice lines maran

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #8 on: September 05, 2013, 03:25:43 PM »
பூக்காரன்...

உப்புக்குவியலென 
நறுமணம் வீசும்
முல்லை மொட்டுக்கள் .

நாரில் கோர்க்க நேரமேது?
நாழி நாலு ரூபாய்
கொட்டிக் கொடுக்கும் பூக்காரன்.

அகம் வெந்து முகம் வாடி
அளந்து  கொடுக்கிறான்
ஒரு ரூபாய், அரை ரூபாய்க்கும் .

பாலித்தீன் பைகள் நிரம்பி வழிய
பஸ் பயணிகளிடம்
உருகும் சின்ன குரல்கள்
"சார் ... ரெண்டு ரூவாதான் "

கூந்தல்களை காணும்போது
நினைவில் வருவது
வெறும் பூக்கள் மட்டுமல்ல...

Offline micro diary

Re: கவிதைகள் - மாறன்
« Reply #9 on: September 09, 2013, 03:52:26 PM »
azhagana varigal maran vazhthukal

Offline Gayathri

Re: கவிதைகள் - மாறன்
« Reply #10 on: September 22, 2013, 12:22:53 AM »
ஒரு மொட்டு ( குழந்தை ) பூவை விற்கிறது
வாழ்க்கையின்  வலிமை சொல்கிறது இந்த கவிதை

மாறன் உங்கள் கவிதை வரிகள் அருமை....

Offline Maran

Re: கவிதைகள் - மாறன்
« Reply #11 on: November 21, 2013, 04:04:56 PM »
மனசு

நல்ல சினேகிதனை
தேடும்போது
கூடவே,
ஒரு முரட்டுக்குணம்...

அதிகம் பேசாதே என
சொல்லும்போது
எப்படி பேசவேண்டும் ..?
கேட்கத்துண்டுகிறது உள்மனம் ...

கடமையில் தடுமாறுகையில்
"நீ மண்ணா போயிடுவே"
என்ற சாபக்குரல்கள்!
திட்டிமுடிப்பதற்குள்
மடித்துப்போகிறது
மறுசிந்தனை...

கையில் இருப்பதைப் பற்றி
அசைபோட்டு பார்ப்பதற்குள்
விரிந்து போகிறது
உலகம் ...

மழையில் நனைந்தாலும்
மௌனத்தில்
குளித்தெழுந்தால் தான்
சிரிக்கமுடிகிறது ...

உருட்டுக்கட்டை வீரன்
எல்லைச்சாமியைக்
கண்டு பயமில்லை ...
ஆனாலும்,
பயந்து நடுங்குகிறேன்
உருவமில்லா
இந்த மனசிற்கு ...!