Author Topic: ஹக்கா நூடுல்ஸ்: சைனீஸ் ரெசிபி  (Read 598 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

சேமியா/நூடுல்ஸ் - 1/2 பாக்கெட் (வேக வைத்தது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்ல சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் சோள மாவை நீரில் கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு கேரட், குடைமிளகாய், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு உப்பு, சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

 தண்ணீரானது சுண்டியதும், அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ்/சேமியாவை போட்டு 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான ஹக்கா நூடுல்ஸ் ரெடி!!!