என்னென்ன தேவை?
வெள்ளரிக்காய் - 1,
புதினா இலை - 20,
இளநீர் - 1,
உப்பு - தேவைக்கேற்ப,
ஜல்ஜீரா தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
புதினா இலை களைக் கழுவி சுத்தப்படுத்தவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். வெள்ளரிக்காயை தோல், விதை நீக்கி அரைத்து, வடிகட்டி சாறு எடுக்கவும். இளநீரை வெட்டி, வழுக்கைப் பகுதியை தனியே வைக்கவும். இளநீர் தண்ணீரை தனியே எடுக்கவும். அரை கப் இளநீரில், அரை கப் வெள்ளரிச்சாறு, 2 டீஸ்பூன் புதினா சாறு, உப்பு, ஜல்ஜீரா தூள் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் மேலே பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.