உலக அளவில் 70வதாக சந்திராயன்-1 விண்கலத்தை சந்திரனில் ஆராய்ச்சி செய்ய இந்தியா அனுப்பியது. அங்கு தண்ணீர் இருப்பதை சந்திராயன் -1 விண்கலம் கண்டறிந்து இந்தியாவுக்கு தகவல்களை அளித்தது. இதனால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மீது மற்ற நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது.
43 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திரனுக்கு விண்கலத்தை ஆய்வுக்காக செலுத்தி வந்த அமெரிக்கா, சந்திராயன் கண்டறிந்ததை மீண்டும் ஒரு விண்கலம் அனுப்பி அது உண்மை என நிரூபித்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு சந்திராயன் பெருமையை சேர்த்துள்ளது. அந்த விண்கலத்திற்கு திட்ட இயக்குனராக பணியாற்றியது பெருமையளிக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம். விரைவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படுகிறது. அதற்கான பணிகள் நடக்கிறது. 2 அல்லது 3ம் தலை முறைக்குள் சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இந்தியர்கள் குடியேறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.