என்னென்ன தேவை?
சிக்கன்-1கிலோ
வெங்காயம்-1/4 கிலோ
மஞ்சள்தூள்-1தேக்கரண்டி
மிளகாய்த்தூள்2 மேஜைக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
இலவங்கம், மிளகு, பட்டை, சோம்பு- தேவையான அளவு
எண்ணெய்-50கிராம்
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கனைப்போட்டு நன்கு வதக்கிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதன்பின் பொடி செய்த மிளகு, பட்டை, சோம்பு, இலவங்கம், சேர்த்து வதக்கவும். அதனுடன் 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி சிக்கனுடன் சேர்க்கவும். சிக்கன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.