Author Topic: ~ வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்... ~  (Read 610 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...



பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது. இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...


வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

* கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

* தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

* அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில்,

- டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது)
- முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர்
- ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள்
- வியர்வைப் பட்டைகள்
- சிறிது சமையல் சோடா

* துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

* என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.