« on: July 11, 2013, 09:38:58 AM »
செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம். இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், எங்கு சென்றாலும், குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோமோ இல்லையோ, செல்போனை உடன் கொண்டு செல்கின்றனர்.
இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று தான் புற்றுநோய். அதுமட்டுமல்லாமல், சிலரால் செல்போனின்றி வேலை செய்யவே முடியாது. இதனால் இது அடிமைத்தனத்தையும் உண்டாக்கும் சக்தியுடையது.
சரி, இப்போது இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!1. தலைவலி

செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.
« Last Edit: July 11, 2013, 09:53:26 AM by MysteRy »

Logged