Author Topic: பாகற்காய் வத்தல்  (Read 629 times)

Offline kanmani

பாகற்காய் வத்தல்
« on: July 10, 2013, 11:31:43 PM »
என்னென்ன தேவை?

பாகற்காய் 1/2கிலோ
புளித் தண்ணீர்  ஒரு கப்,
மிளகாய்த்தூள்  5 டீஸ்பூன்,
உப்பு  தேவையான அளவு.

எப்படி செய்வது?

பாகற்காயை வட்டமாக நறுக்கி, புளித் தண்ணீரில் வேக வைக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2  நிமிடம்  வேக விடவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, பாகற்காயை வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். காயவைத்ததை ஒரு டப்பாவில்  போட்டு  அடைத்து வைக்கவும். எப்போது வேண்டுமானாலும் வறுத்து சாப்பிடலாம். குழம்பில் வறுத்தும் சேர்க்கலாம். சாதாரணமாகவும்  வறுத்து சாப்பிடலாம்.