Author Topic: தேங்காய் கேக்  (Read 575 times)

Offline kanmani

தேங்காய் கேக்
« on: July 09, 2013, 03:01:48 AM »

     மைதா மாவு - 2 கப்
     தேங்காய் துருவல் - 1 1/2 கப்
     சர்க்கரை - 1 1/2 கப்
     பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
     பட்டர் - 1 கப்
    பால் - 1 கப்
     முட்டை - 3
     உப்பு - 1 சிட்டிகை
    வென்னிலா எஸன்ஸ் - 1 தேக்கரண்டி




    மாவு, உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து வைக்கவும்.
    இதில் வெண்ணை சேர்த்து கலந்து வைக்கவும்.
    முட்டையை அடித்து, அதில் பால், வென்னிலா எஸன்ஸ் கலந்து கொள்ளவும்.
    இதை மாவு கலவையில் சேர்த்து கலந்து தேங்காய் துருவலும் சேர்க்கவும்.
    பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 டி முற்சூடு செய்த அவனில் 30 - 40 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.