Author Topic: ஜுஜுப்ஸ்  (Read 474 times)

Offline kanmani

ஜுஜுப்ஸ்
« on: July 09, 2013, 02:46:08 AM »
என்னென்ன தேவை?

சர்க்கரை - 500 கிராம்,
தண்ணீர் - 300 மி.லி.,
பால் - சிறிதளவு,
ஜெலட்டின் - 50 கிராம்,
கலர் - தேவைக்கேற்ப,
மேலே தூவ - சிறிதளவு சர்க்கரை.

எப்படிச் செய்வது?

சர்க்கரையையும் தண்ணீரையும் கலந்து கொதிக்க விடவும். சிறிதளவு பால் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி, சுத்தம் செய்து மீண்டும் கடாயில்  கொட்டி பிசுபிசுக்கும் பதம் வரும்வரை கொதிக்க விடவும். ஜெலட்டினை ஒரு கப் தண்ணீர் விட்டு, சுமார் அரை மணிநேரம் ஒரு கனமான பாத்திரத்தில்  ஊற வைக்கவும். மெல்லிய தீயில் பாத்திரத்தை வைத்து ஜெலட்டினை கொதிக்க விடவும்.

ஒரு பீட்டரால், கைவிடாமல் நுரைக்க அடிக்கவும். நன்றாக வெந்து வாசனை வந்தபின், ரெடியாக வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் கொட்டி, பின்  அடுப்பின் மேல் மீண்டும் வைத்துக் கிளறவும். ஒரு பலகை போல்(ஷீட்) சர்க்கரைப் பாகுப்பதம் வந்தவுடன் ஒரு அலுமினியத் தட்டில் கொட்டி  ஆறியவுடன் ஃபிரிட்ஜில் 4 மணி நேரம் வைக்கவும். செட் ஆனபின் எடுத்து சர்க்கரை தூவி சாப்பிடலாம்.