Author Topic: சாக்லெட் கேக் (முட்டையில்லாதது)  (Read 521 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

மைதா - 2 கப், வெண்ணெய் - ஒன்றே கால் கப், கன்டென்ஸ்டு மில்க் - முக்கால் டின், கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், பேகிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், பால் - அரை கப், பொடித்த சர்க்கரை - அரை கப், வெனிலா எசென்ஸ் - சில துளிகள்.

எப்படிச் செய்வது?

மைதாவுடன் பேகிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும். வெண்ணெயை நன்கு நுரைக்க அடிக்கவும். பிறகு அதில் சர்க்கரையும் கன்டென்ஸ்டு மில்க்கும் சேர்த்து அடிக்கவும். பிறகு மைதா, கோகோ கலவையைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து, ஒரே பக்கமாகக் கலக்கவும். எசென்ஸ் சேர்க்கவும். பால் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு வந்ததும், வெண்ணெய் தடவிய கேக் டிரேயில், மேலே லேசாக மாவு தூவி, கேக் கலவையைக் கொட்டி, 350 டிகிரி உஷ்ணத்தில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அவன் அல்லது பழைய குக்கரில் 45 முதல் 60 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம். ஒரு கப் பொடித்த சர்க்கரையில், 1 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடரும், அரை கப் வெண்ணெயும் சேர்த்து நன்கு குழைத்து, கேக்கின் மேல் எல்லா பக்கங்களிலும் கத்தியால் தடவி ஐசிங் செய்து, அலங்கரித்துப் பரிமாறவும்.