Author Topic: பசலைக் கீரை பஜ்ஜி  (Read 543 times)

Offline kanmani

பசலைக் கீரை பஜ்ஜி
« on: July 08, 2013, 11:24:44 PM »
தேவையான பொருட்கள்:

பசலைக் கீரையின் இலை - 1 கப்
கடலை மாவு - 1 கப்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் பசலைக் கீரையின் இலையை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு பொடி, சீரகப் பொடி, பெருங்காயத் தூள், எள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பஜ்ஜி மாவில் ஒவ்வொரு இலையையும் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 இதேப் போன்று அனைத்து இலைகளையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான பசலைக் கீரை பஜ்ஜி ரெடி!!!