கடற்பாசி - ஒரு கைப்பிடி அளவு(10 கிராம்)
மாம்பழக் கூழ் - ஒரு கப்
சீனி - முக்கால் கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
பால் - 2 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் கிரீம் - ஒன்றரை மேசைக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். கொதி வந்ததும் அதில் கடற்பாசியை சேர்த்து கொதிக்கவிடவும்.
கடற்பாசி கரைந்ததும் சீனியை சேர்த்து காய்ச்சி மாம்பழக் கூழை சேர்த்து கொதிக்கவிடவும்.
அதனுடன் ஃப்ரஷ் கிரீம் மற்றும் பால் சேர்க்கவும்.
பீட்டரால் நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
இதை வேறு பாத்திரத்தில் மாற்றி அரை மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். அப்படியே செட்டாகி இருக்கும்.
சுவையான மாம்பழ கடற்பாசி தயார். விரும்பிய வடிவங்களில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
நான் டின் மாம்பழக் கூழ் சேர்த்து செய்துள்ளேன். மாம்பழத்தை அரைத்து அந்த கூழையும் சேர்க்கலாம். புளிப்பு சுவையை எடுப்பதற்காக நான் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்துள்ளேன். ஃப்ரஷ் க்ரீம் சேர்க்காமலும் செய்யலாம்.