Author Topic: உருளைக் கறி  (Read 534 times)

Offline kanmani

உருளைக் கறி
« on: July 08, 2013, 10:52:53 PM »
என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - 4,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கடுகு -  அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கில் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்துத் தோல் நீக்கி, சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்  விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து வதக்கி  எடுக்கவும். இந்த உருளைக்கிழங்கு கறியில் காரம் குறைவாக இருக்கும். பூண்டு வத்தக் குழம்பு கொஞ்சம் காரமாக இருக்கும் என்பதால், அதற்கு  சரியான மேட்ச் இந்தக் கறி. கூடவே சுட்ட அப்பளம் இருந்தால், சூப்பர் காம்பினேஷன்.