என்னென்ன தேவை?
பயத்தம் பருப்பு - கால் கிலோ
புளிப்பான மாங்காய் (பெரியது) - 1
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படி செய்வது?
மாங்காயை தோல்சீவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை நடுவில் வகுந்து கொள்ளுங்கள். பயத்தம் பருப்பை அலசி, அதில் மாங்காய், பூண்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள். நன்கு வெந்ததும், கரண்டியால் அந்த கலவையை மசித்துக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து போட்டு தாளித்து, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சியைப் போட்டு வதக்குங்கள். பச்சைவாடை போக வதங்கியதும், வேகவைத்த கலவையைக் கொட்டி கிளறி சிறிதுநேரம் வேகவிட்டு இறக்குங்கள். ஆந்திராவின் பாரம்பரியம் மணக்கும் மாமடிக்காய பப்பு ரெடி.