என்னென்ன தேவை?
கேரட்-1/2 கிலோ
கோதுமை மாவு-1/2 கிலோ
சர்க்கரை-200 கிராம்
ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை-தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
எப்படி செய்வது?
கோதுமை மாவை உப்பு போட்டு பிசைந்து சப்பாத்தி மாவு தயார் செய்யவும். பிறகு கேரட்டைத் துருவி வேகவிட்டு சர்க்கரை, ஏலப்பொடி போட்டு கெட்டியாக பூரணம் செய்து சப்பாத்தி மாவின் உள்ளே வைத்து மூடி திரட்டி நெய்விட்டு சப்பாத்தி செய்ய வேண்டும். இதனுடன் முந்திரி, திராட்சை, போட்டும் செய்யலாம். இதை குழந்தைகளுக்காக செய்யலாம். கேரட் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.