Author Topic: மக்காச்சோள பாயாசம்  (Read 571 times)

Offline kanmani

மக்காச்சோள பாயாசம்
« on: July 06, 2013, 11:11:58 PM »

    உடைத்த மக்காச்சோளம் (Dry Corn) - முக்கால் கப்
    வெல்லம் - 80 கிராம்
    தேங்காய் பால் - அரை கப்
    பால் - அரை கப்
    சீனி - 4 மேசைக்கரண்டி
    ஏலத்தூள் - சிறிது
    வெண்ணெய் - 20 கிராம்


உடைத்த மக்காச்சோளத்தை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.
   

குக்கரில் ஊற வைத்த சோளத்துடன் 2 கப் நீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும்.
   

வெந்ததும் வெல்லம், பால், சீனி சேர்த்து கிளறவும்.
   

பிறகு ஏலத்தூள், வெண்ணெய், தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
   

சுவையான, சத்தான மக்காச்சோள பாயாசம் தயார்.