Author Topic: பாகற்காய் வறுவல்  (Read 478 times)

Offline kanmani

பாகற்காய் வறுவல்
« on: July 04, 2013, 11:29:19 PM »

    பாகற்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - 5
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    உப்பு - அரை தேக்கரண்டி
    புளி - நெல்லிக்காய் அளவு
    கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 

 
   

பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். புளியை திக்காக கரைத்து 2 மேசைக்கரண்டி அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
   

ஒரு பாத்திரத்தில் பாகற்காயுடன் மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
   

வெந்ததும் நீரை வடிக்கட்டிவிட்டு பாகற்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்து, மிளகாய் தூள், கடலை மாவு போட்டு புளிக்கரைச்சல் ஊற்றி பிரட்டிவிடவும்.
   

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பிரட்டி வைத்த பாகற்காயை போட்டு நன்கு வதக்கிவிடவும்.
   

ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மொறு மொறுவென்று ஆகும் வரை வறுத்து இறக்கிவிடவும். (வறுப்பதற்கு முன் 5 நிமிடங்கள் வெயிலில் உலர்த்தி விட்டு வறுத்தால் மொறு மொறுவென்று இருக்கும்).
   

சுவையான, மொறு மொறுப்பான பாகற்காய் வறுவல் தயார்.