Author Topic: ~ எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள் ~  (Read 1007 times)

Offline MysteRy

எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள்




இணையத்தில் தற்போது பல வழிகளில் வைரஸ் பரவி வருகிறது. குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வதால், குறிப்பிட்ட File களை ஓபன் செய்வதால் என்று தொடரும் இந்த லிஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று மின்னஞ்சலில் வரும் PDF File கள். கடந்த இரண்டு வருடங்களில் இது அதிகமாகி வருகிறது.

இணையத்தில் நாம் பல இடங்களில் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து வருகிறோம், அவற்றில் நம்பிக்கையற்ற பல தளங்கள் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பல தவறான நபர்களிடம் விற்று விடுகின்றன. அவ்வாறாக விற்கப்பட்ட பின் நம் மின்னஞ்சல் முகவரிக்கு தேவையற்ற மின்னஞ்சல்களை குறிப்பிட்ட தளங்கள் அனுப்பும். அவற்றில் பல பண மோசடி செய்யும் தளங்களாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் கேட்கும் விஷயத்தை நாம் செய்யக்கூடாது என்பதோடு அதில் ஏதேனும் File Attach செய்யப்பட்டு இருப்பின் அதனையும் திறக்க கூடாது. தற்போது அவற்றின் மூலம் வைரசும் சேர்ந்து வருகிறது.

அவற்றில் குறிப்பிடதக்க ஒன்று PDF Files. ஆம் PDF File மூலமும் வைரஸ்களை அனுப்பி அவற்றை நாம் மின்னஞ்சலில் இருந்து டவுன்லோட் செய்யும் போதோ அல்லது ஆன்லைன் மூலமே படிக்கும் போதோ malicious javascript கள் நம் கணினியில் தேவையற்ற மென்பொருட்களை நாம் அறியாமலேயே நிறுவும். இவை உங்களில் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்கள் கணினி Hack செய்யப்படலாம்.

எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம்/மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை திறந்து பார்த்து என்ன என்பதை படித்து விட்டு டெலீட் செய்து விட வேண்டும். இவ்வாறு மட்டும் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் கணினிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை PDF File-கள், அதுவும் Adobe Reader/Acrobat மூலம் திறக்கப்பட்டவை.

இது குறித்து Microsoft Malware Protection Center குறிப்பிட்ட சில பெயருடைய PDF File – களை நமது கணினிகளில் திறக்க வேண்டாம் கேட்டுக்கொண்டுள்ளது. அவை,

pdf_new[1].pdf
auhtjseubpazbo5[1].pdf
avjudtcobzimxnj2[1].pdf
pricelist[1].pdf
couple_saying_lucky[1].pdf
5661f[1].pdf 7927
9fbe0[1].pdf 7065
pdf_old[1].pdf

பெரும்பாலும் இந்த பெயரில் வந்தாலும் சில வேறு பெயரிலும் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்ப்பதே நலம்.

இதை தவிர்க்க மற்ற சில வழிகள்:

உங்கள் Adobe Reader மென்பொருளை புதிய Version க்கு Update செய்து கொள்ளுங்கள்.
Chrome, Firefox போன்ற நம்பிக்கையான ப்ரௌசெர்களை மட்டும் பயன்படுத்தவும்.
நல்ல Anti-virus மென்பொருளை பயன்படுத்தவும்.

இத்தோடு Adobe Reader பயன்படுத்தும் நபர்கள் அதில் JavaScript ஐ Disable செய்து கொள்வதும் நல்லது.

Adobe Reader இல் எப்படி JavaScript ஐ Disable செய்வது ?

Adobe Reader >> Edit >> Preferences >> JavaScript >> Enable Acrobat JavaScript என்பதை Uncheck செய்து விடவும்.