Author Topic: சோல் மீன் குழம்பு  (Read 572 times)

Offline kanmani

சோல் மீன் குழம்பு
« on: July 03, 2013, 02:09:59 PM »
என்னென்ன தேவை?

சோல் மீன் -500கிராம்
சிறிய வெங்காயம் -7
துண்டாக்கப்பட்ட இஞ்சி -1 டீஸ்பூன்
துண்டாக்கப்பட்ட பூண்டு -1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கரைப்பதற்கு புளி -எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் -3/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 -தேக்கரண்டி
வெந்தய பொடி -ஒரு சிட்டிகை
மிளகு தூள் -ஒரு சிட்டிகை (விரும்பினால்)
தேங்காய் பால் -(விரும்பினால்)
சுடு நீர்
உப்பு -தேவைக்கேற்ப
கறிவேப்பிலை
கடுகு -1 டீஸ்பூன்
எண்ணெய்-தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

மீன்களை சுத்தம் செய்து நடுத்தர அளவிளான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். துண்டுகளாக வெட்டப்பட்ட மீன்களை தண்ணீரில் மூழ்கும் அளவில்  ஊறவைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சூடான நீர் கலந்து அனைத்து  பொடிகளையும் பேஸ்ட் போல வைத்துக்கொள்ள வேண்டும். புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் கடுகு போடவும். வெட்டிவைத்துள்ள இஞ்சி, பூண்டு,வெங்காயம், சேர்த்து வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை  ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.

தயார் நிலையில் வைத்துள்ள பேஸ்ட்டை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். தண்ணீர் கொதிநிலைக்கு வரும்போது  மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும். கொதிநிலைக்கு வந்ததும் கரைத்து வைத்துள்ள புளி சாற்றை குழம்பில் கலந்து சிறிது நேரத்திற்கு பின்  கரண்டியால் கலக்கி விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். கெட்டியான குழம்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள  வேண்டும். நீங்கள் விரும்பினால் அதனுடன் தேங்காய்பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.