என்னென்ன தேவை?
புழுங்கலரிசி- 800 மில்லி
கேரட்-1/2 கிலோ துருவியது
உளுந்தம் பருப்பு-200மில்லி
வெந்தயம்-1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
புழுங்கலரிசியை நன்றாக கழுவி காலையில் ஊறவைக்கவும். காலை 10 மணிக்கு ஊறவைத்தால் மாலை 3 மணிக்கு அரைக்கலாம். அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு ஊளுந்து வெந்தயத்தை ஊற வைத்தால் போதுமானது. அரிசியை கழுவி மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். இட்லிக்கு மாவை மை போல் அரைக்க தேவையில்லை. பின்னர் உளுந்தை அரைக்கவும். உளுந்தை மை போல் நன்கு அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து உப்பு கலந்து வைக்கவும். மறுநாள் காலையில் இட்லி செய்யும் போது துருவிய கேரட்டை மாவுடன் கலந்து இட்லி தயார் செய்யலாம்.