என்னென்ன தேவை?
மாதுளம் பழம் - 1, கொய்யா,
ஆப்பிள், வெள்ளரி, கேரட்,
கமலா ஆரஞ்சு - தலா 1,
தக்காளி - 2,
எலுமிச்சைப் பழம் - அரை மூடி,
தேன் - 1 டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்,
சாட் மசாலா - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளில் விதை நீக்கித் தனியே வைக்கவும். மற்ற பழங்கள், காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டவும். எலுமிச்சைச்சாறு, ஆலிவ் ஆயில், தேன் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு அடித்துத் தனியே வைக்கவும். நறுக்கிய பழங்கள், காய்கறிகளை ஒன்றாகச் சேர்க்கவும். சாட் மசாலா தூவவும். எலுமிச்சை-தேன்-ஆலிவ் ஆயில் கலவையை அதில் கலந்து, குளிர வைத்துப் பரிமாறவும்.
இதய நோய், நீரிழிவு உள்ளவர்களும் டயட் செய்வோரும் கூட சாப்பிடலாம். நீரிழிவுக்காரர்கள் மட்டும் பழங்களின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கும் மருந்து.