தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
தயிர் - 1 கப்
கனிந்த மாம்பழம் - 1 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அடுப்பிலிருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை வாணலியில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து நறுக்கிய மாம்பழத்தை அதில் சேர்த்து கிளறிக் கொண்டு, சாதம் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, ஒரு மூடி கொண்டு 1/2 மணிநேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், அருமையான மாம்பழ தயிர் சாதம் ரெடி!!!