தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ண்ய ஊற்றி, பன்னீர் துண்டுகளை 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கி, அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு பூண்டு, குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். அடுத்து சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு மீதமுள்ள சோளமாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, நீர் வற்றும் வரை மென்மையாக பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி!!!