என்னென்ன தேவை?
கிர்ணிப் பழம் - ஒன்று,
வெல்லம் - கால் கிலோ,
அலங்கரிக்க தேவையான பழங்கள்- மாதுளை அல்லது திராட்சை, செர்ரி பழம்.
எப்படிச் செய்வது?
கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தமான வெல்லத்தை சீவி பழத்துடன் கலக்கவும். பழமும் வெல்லமும் நன்றாகக் கலந்ததும் எடுத்து அரை மணி நேரம் ஃபரிட்ஜில் வைத்து மற்ற பழங்களைக் கொண்டு அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும். கோடை வெயிலில் இருந்து நிவாரணம் பெறலாம்.