என்னென்ன தேவை?
பலாக்காய் அதிகம் பழுக்காதது - 10, 15 சுளைகள்,
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
கடலை மாவு - 3/4 கப்,
பச்சரிசி மாவு - 1/4 கப்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப.
எப்படிச் செய்வது?
கடைகளில் பாதி பழுத்த பலாச்சுளைகள் கிடைக்கும். அதைக் கேட்டு வாங்கி, நீள வாக்கில், மெல்லியதாக வெட்டி இத்துடன் மிளகாய் தூள், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு 1 டீஸ்பூன், சூடான எண்ணெய் சேர்த்து சிறிது நீர் தெளித்து உதிரி, உதிரியாகப் பிசறவும். கடாயில் எண்ணெய் சுடவைத்து, சூடானதும் பிசறிய கலவையில் இருந்து சிறிது, சிறிதாக எடுத்து எண்ணெயில் உதிர்த்து விட்டு பொரித்தெடுக்கவும். இது சிறிது இனிப்பாகவும் காரமாகவும் இருக்கும். இது கேரள ஸ்பெஷல்.