என் பொய்யான
கோபம் பிடிக்கும்
என்பாய்......
ஆயிரம் வார்த்தைப்
பேசும் உன்னிடம்
என் ஓர்
வார்த்தை
"ம்"
பிடிக்கும்... என்பாய்......
எனக்கு பிடிக்காத
வண்னத்தை
விளையாட்டாய்
பிடிக்கும் என்றால்
அந்த நிறத்தில்
உடை அணிவாய்...
நான் சொன்னதை
செய்ய பிடிக்கும்
என்பாய்...
நான் பார்த்தும்
பாராமல் நடக்கும்
அந்த ஒரு
நொடி கூட
இன்பம்
என்பாய்....
உன் இமை
மூடும்
நேரத்தில்
நான் மறையும்
அந்த ஒரு
நொடி கொடுமை
என்பாய்....
அன்பே இவை
எல்லாம் இப்போதும்
நான் செய்கிறேன்.....
ஆனால்
இன்று மட்டும்
பிடிக்காமல் போனது
எதனால்....
தூரத்தில் இருந்த
உறவு இன்று
உன் சொந்தமாய்
உன் வீட்டில்
உன் மனைவியாய்
இருந்தும் பிடிக்காமல்
போனது எதனால்......