வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்
தக்காளிக் காய் - 5
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுந்து, சீரகம், எண்ணெய், காய்ந்த மிளகாய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிக் காய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, வேக வைத்த பாசிப்பருப்புடன் வதக்கியவற்றை சேர்த்து வேகவிடவும்.
தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைத்து, பருப்புக் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான தக்காளிக்காய் கூட்டு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.