Author Topic: வால்நட் காபி ஃபிராப்பி  (Read 503 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

வால்நட் - 7,
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்,
சாக்லெட் சிப்ஸ் - 2 டீஸ்பூன்,
வெனிலா ஐஸ் கிரீம் - 2 ஸ்கூப்,
பால் - 1 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
தேன் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பிளெண்டரில் வால்நட்டை போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். அதில் பால், ஒன்றரை டீஸ்பூன் சாக்லெட் சிப்ஸ், வெனிலா ஐஸ்கிரீம்,  எசென்ஸ், காபி தூள், தேன் எல்லாம் சேர்த்து, கிரீம் பதத்துக்கு மிருதுவாக வரும்வரை அடிக் கவும். மேலே கொஞ்சம் ஐஸ்கிரீம் வைத்து, மீதியுள்ள  சாக்லெட் சிப்ஸ் தூவிக் குளிரக் குளிரப் பரிமாறவும்.