Author Topic: பச்சி மிரப்பக்காய் பச்சடி  (Read 793 times)

Offline kanmani


என்னென்ன தேவை ?

புளி - எலுமிச்சை அளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சைமிளகாய் - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.


எப்படி செய்வது?

பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். கெட்டியாக கொஞ்சமும், தண்ணீராக கொஞ்சமும் புளியை இரண்டு தரத்தில் கரைத்துக்  கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, முதலில்  இஞ்சியையும், சிறிது இடைவெளி விட்டு மிளகாயையும் போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை நீங்க வதங்கியதும், கெட்டியாக கரைத்த  புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடுங்கள்.
இரண்டு கொதி வந்ததும் இரண்டாம் தர புளிக்கரைசலை ஊற்றி நன்றாக  சுண்ட வையுங்கள். அல்லம் பச்சி மிரப்பக்காய பச்சடி ரெடி.