Author Topic: ~ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள் ~  (Read 827 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள்

காய்ச்சல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் அத்தகைய காய்ச்சல் தீவிரமானால், அதுவே பெரிய ஆபத்தை விளைவிக்கும். அவ்வாறு உயிருக்கே ஆபத்தை விளைக்கும் வகையில் பல வகையான காய்ச்சல்கள் உள்ளன. அதிலும் அக்காலத்தில் எல்லாம் காய்ச்சலுக்கான பாராசிட்டமல் மாத்திரைகள் இல்லை. அதனால் பலர் காய்ச்சலினாலேயே உயிரை துறந்தனர்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் காய்ச்சலினால் இறப்பு ஏற்படுவது என்பது குறைந்துவிட்டது. ஏனெனில் அந்த அளவில் நமது மருத்துவத் துறை காய்ச்சலுக்கான மருந்துகளை கண்டுபிடித்து, அவற்றை சரிசெய்யும் அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, நமக்கு வந்திருப்பது எந்த வகையான காய்ச்சல் என்பது தான். பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ்களினால் ஏற்படும். அவ்வாறு காய்ச்சல் ஏற்படும் போது, உடல்நிலை மிகவும் மோசமாக ஆவது போல், வேறு சில அறிகுறிகளுடன் காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இல்லாவிட்டால், மிகவும் தீவிரமான நிலையில் மருத்துவரும் கையை விரிக்க நேரிடும். எனவே ஒவ்வொருவரும் சாதாரணமாக காய்ச்சலை எண்ணாமல், அவற்றில் உள்ள வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு காய்ச்சலும் வித்தியாசமான அறிகுறிகளுடன் இருப்பதால், அதனை எளிதில் கண்டறியலாம்.

சரி, இப்போது காய்ச்சலில் உள்ள வகைகளைப் பார்ப்போம்.



1. வைரஸ் காய்ச்சல்



 
பொதுவான வைரஸ் காய்ச்சலானது, 9 நாட்கள் இருக்கும். மேலும் மருத்துவ விதிமுறைகளின் படி, வைரஸ் காய்ச்சலானது முதல் 3 நாட்கள் உடலில் தங்கி, அடுத்த மூன்று நாட்களில் அதிகப்படியான காய்ச்சலை ஏற்படுத்தி, இறுதி 3 நாட்களில் காய்ச்சலானது குறைய ஆரம்பிக்கும். பொதுவாக இந்த வகையான காய்ச்சல் தொண்டையில் நோய் தொற்றை ஏற்படுத்தும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
2. டெங்கு காய்ச்சல்



டெங்கு ஒரு உயிர்க்கொல்லி காய்ச்சல். இதனை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் சொல்வார்கள். இந்த காய்ச்சல், கொசுக்களின் கடியால் ஏற்படக்கூடியது மற்றும் இந்த காய்ச்சல் வந்தால் கடுமையான உடல் வலி இருக்கும். மேலும் இது வந்தால், அவ்வப்போது அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு, உடல் குளிர்ச்சியடையும். இந்த காய்ச்சலின் தீவிர நிலையில், உடலின் உட்பகுதியில் இரத்த கசிவை ஏற்படுத்தும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
3. மலேரியா



மலேரியாவும் கொசுக்கடியால் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் ஆகும். வெப்ப மண்டலப்பகுதியில் வாழும் பல மக்கள், இந்த காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இது வந்தால், உடல் நடுக்கத்துடன் காய்ச்சல் இருக்கும். இதன் தீவிரம் அதிகம் இருந்தால், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
4. சிக்கன் குனியா



சிக்கன் குனியா என்றதும். சிக்கனால் தான் ஏற்படுகிறது என்று நினைக்க வேண்டாம். இதுவும் கொசுக்களின் மூலம் வைரஸானது உடலைத் தாக்கும். இது மலேரியா மற்றும் டெங்குவை விட சற்று வீரியம் குறைந்தது தான். ஆனால் இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியுடன் காய்ச்சலானது அதிகம் இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
5. டைபாய்டு



டைபாய்டு, வயிற்றில் தொற்று காரணமாக ஏற்படுவது. இந்த காய்ச்சல் உண்ணும் உணவுகள் அல்லது குடிக்கும் நீரின் மூலம், டைபாய்டை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களானது வயிற்றில் தொற்றுக்களை ஏற்படுத்தி, கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
6. மூளைக்காய்ச்சல்


 
இந்த வகையான காய்ச்சலில் ஒரு மென்மையான திசுவானது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கி, கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும். அதாவது இது மூளை பாதித்து, அடிக்கடி வலிப்பு மற்றும் தலைவலியை உண்டாக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
7. பன்றி காய்ச்சல்


 
H1N1 அல்லது பன்றி காய்ச்சலானது, வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுவதே. இந்த வைரஸ் உடலைத் தாக்கினால், அதிகப்படியான காய்ச்சல், தொண்டையில் நோய்த்தொற்று மற்றும் கல்லீரலில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும். 2010-இல் இந்த நோய் தாக்கத்தினால், பலர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இந்த நோய்க்கான மருந்தான தமிப்ளூ (Tamiflu) கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த காய்ச்சலை சரியான நிலையில் கண்டுபிடித்து, சிகிச்சை பெற வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
8. எச்.ஐ.வி



எச்.ஐ.வி தொற்று இருப்பதை அறிவதற்கான முதல் அறிகுறியே நீடித்த லேசான காய்ச்சல் இருக்கும். அதுவும் போதிய மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே காய்ச்சலானது நீடித்தால், உடனே எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
9. சிறுநீரக குழாய்



நோய்த்தொற்று சில நேரங்களில், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று இருந்தாலும், காய்ச்சலானது ஏற்படும். இது பெரிய அளவில் காய்ச்சவை ஏற்படுத்தாவிட்டாலும், அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீரை வெளியேற்றும் போது எரிச்சலை உண்டாக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226397
  • Total likes: 28829
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
10. இரத்த புற்றுநோய்


 
இரத்த புற்றுநோய் உள்ளவர்களுக்கு, பல மாதங்களுக்கு லேசான மற்றும் நச்சரிக்கும் வகையில் காய்ச்சலானது இருக்கும்.