கொடுமையிலும் கொடுமை அது பசிக்கொடுமை
இதற்க்கு காரணமோ ஏழ்மையின் வறுமை
அடுத்த வேலை உணவிற்கு வலி இல்லை
இப்படி எத்தனையோ மாந்தர்கள் நாட்டினிலே...
விண்ணுக்கு அனுப்புகிறார்கள் செயர்க்கைகோள்களை
வல்லரசு கனவொன்றும் காண்கிறார்கள்...
ஆனால் பசித்தவனின் வயிற்றிற்கு உணவளிக்க நினைப்பதில்லை!
பட்டினியில் இறப்பவர்களை கண்டுகொள்ள நாதியில்லை!!!
வறுமையை ஒழிக்க முன்வராத அரசாங்கமே!
நீ வல்லரசு கனவு கண்டு என்ன பயன்?
முதலாளி தத்துவத்தை தகர்த்திடுவோம்...
வறுமை அற்ற மக்களை உருவாக்கிடுவோம்!!!