Author Topic: வெங்காய கொத்சு  (Read 584 times)

Offline kanmani

வெங்காய கொத்சு
« on: June 23, 2013, 11:45:05 PM »


    சின்ன வெங்காயம் - கால் கிலோ
    பச்சை மிளகாய் - 3
    பூண்டு - 2
    குடைமிளகாய் - கால் பாகம்
    தக்காளி - ஒன்று
    பாசிப்பருப்பு - கால் கப்
    மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் - தலா ஒரு தேக்கரண்டி
    உப்பு, புளி - தேவைக்கு ஏற்ப
    கடுகு, உளுந்து, சீரகம், எண்ணெய் - தாளிக்க
    கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். அரை கப் அளவு நீரில் புளியை கரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
   

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
   

பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, வேக வைத்த பருப்பைச் சேர்த்து கிளறிவிட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
   

சுவையான வெங்காய கொத்சு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.