Author Topic: அரைத்துவிட்ட மீன் குழம்பு  (Read 702 times)

Offline kanmani

மீன் -1/2 கிலோ
தக்காளி - 1

கரைத்து கொள்ள :

புளி - ஒரு எலுமிச்சை அளவு
தண்ணீர் - 5- 6 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்

மஞ்சள் தூள் - 1/2 தே கரண்டி
தனியா தூள் - 2 மேஜை கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜை கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைத்துகொள்ள
சின்ன வெங்காயம் - 8
தேங்காய் - சிறிய துண்டுகள்

கடைசியாக தாளிக்க

எண்ணை -  2 மேஜை கரண்டி
தாளிக்கும் வடகம் - 1 தே கரண்டி
கருவேப்பில்லை - 5 இலை

செய்முறை :

புளியினைதண்ணீரில்  கரைத்து கொள்ளவும். அத்துடன் தூள் வகைகள் + தக்காளி
சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடாயில் புளி கரைசலை ஊற்றி  10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
தேங்காயை மிக்சியில்  நன்றாக மைய அரைக்கவும். அத்துடன் கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒன்றும்பாதியுமாக  அரைக்கவும்.
அரைத்த விழுதினை கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி மேலும்  5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு மீன்கள் சேர்த்து 5 நிமிடம் வேக வேகவைக்கவும்.
தாளிக்க  இருக்கும் பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி

வடகம் விரும்பாதவர்கள் - வெந்தையம் தாளித்து சேர்க்கவும்.