வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - பாதி
பூண்டு - 5 பல்
இஞ்சி - பாதி விரல் அளவு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய், கடுகு, சீரகம், சோம்பு - தாளிக்க
வாழைக்காயை முக்கால் பதத்தில் வேகவைத்து, தோல் நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் தாராளமாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம், சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வாழைக்காய், தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி நீர் தெளித்து வேகவிடவும்.
நன்கு வெந்ததும், மேலும் சிறிது எண்ணெய்/குக்கிங் ஸ்ப்ரே விட்டு, சிறு தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான வாழைக்காய் மசாலா ரோஸ்ட் ரெடி.
கரம் மசாலா பொடிக்கு இங்கே சொடுக்கவும் : கரம் மசாலா பொடி