கேழ்வரகு, கம்பு, எள் போன்ற பல வகையான தானியக் கலவை - ஒரு கப்
ஓட்ஸ் - அரை கப்
ரவை - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கேரட் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் பால் - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
புதினா, மல்லித் தழை
தானியங்களை 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளியை துண்டுகளாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி, கேரட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் ஊறவைத்த தானியக் கலவை, ரவை, ஓட்ஸ், உப்பு, புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து 2 கப் நீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் ஊற்றி வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான, சத்தான தானியக் கஞ்சி ரெடி. இதனுடன் உங்களுக்கு விரும்பமான சிறு தானியங்களைச் சேர்த்தும் செய்யலாம். நான் வெள்ளரி விதை, ஆளி விதை (Lin Seed) சேர்த்து செய்துள்ளேன்.