Author Topic: நாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்!!!  (Read 1538 times)

Offline kanmani

வீட்டில் ஆசையாக நாய் வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு அருகில் உள்ளோர் நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், அந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், இதை சாப்பிட்டால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடும், அதை சாப்பிட்டால் நாய் நோய்வாய்ப்படும் என்று பலர் பலவிதமாக கூறுவார்கள். இந்த உலகில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. எதிலும் ஒரு மூடநம்பிக்கையானது நிறைந்திருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது மட்டும் மூடநம்பிக்கை இல்லாமலா இருக்கும்.

ஆம், முதலில் நாயை வளர்க்க ஆசைப்பட்டால், நாய்களைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதை விட்டு மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று, அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் தவறு செய்தால், பின் நாய் வளர்க்கும் ஆசையை கைவிட வேண்டியது தான். பொதுவாக நாய்க்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வீட்டு உணவு மற்றொன்று ஃபார்முலா உணவு. இத்தகைய நாய்களின் உணவுகள் பற்றி சில மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அத்தகைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சரியான உணவுகளை நாய்க்கு கொடுத்து வளர்த்து வாருங்கள்.


Updated: Friday, June 21, 2013, 11:38 [IST] Ads by Google Tips for Beautiful Skin Get the right beauty tips for your skin from the Experts. Apply Now! KayaClinic.com Anti Dandruff Shampoo Head & Shoulders Rids More Dandruff in Just One Wash. Order Free Sample www.HeadandShoulders.co.in வீட்டில் ஆசையாக நாய் வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு அருகில் உள்ளோர் நாய்களுக்கு இந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், அந்த உணவுகளை கொடுக்க வேண்டாம், இதை சாப்பிட்டால் நாய்க்கு ஏதாவது ஆகிவிடும், அதை சாப்பிட்டால் நாய் நோய்வாய்ப்படும் என்று பலர் பலவிதமாக கூறுவார்கள். இந்த உலகில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. எதிலும் ஒரு மூடநம்பிக்கையானது நிறைந்திருக்கும். அந்த வகையில் நாய்கள் மீது மட்டும் மூடநம்பிக்கை இல்லாமலா இருக்கும். ஆம், முதலில் நாயை வளர்க்க ஆசைப்பட்டால், நாய்களைப் பற்றிய முழு விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதை விட்டு மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று, அதற்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் தவறு செய்தால், பின் நாய் வளர்க்கும் ஆசையை கைவிட வேண்டியது தான். பொதுவாக நாய்க்கு கொடுக்கும் உணவுகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை வீட்டு உணவு மற்றொன்று ஃபார்முலா உணவு. இத்தகைய நாய்களின் உணவுகள் பற்றி சில மூடநம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அது என்னவென்று கொடுத்துள்ளோம். அத்தகைய மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்து, சரியான உணவுகளை நாய்க்கு கொடுத்து வளர்த்து வாருங்கள். நாய் உணவுகளைப் பற்றிய சில மூடநம்பிக்கைகள்!!!

* நாய்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

உண்மையில் இது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு நம்பிக்கையாகும். ஆம், நாய்களின் செரிமான மண்டலத்திற்கும், மனிதனின் செரிமான மண்டலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. எனவே மனிதன் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக்கூடாது. சிலர் "என் நாய்க்கு நான் அனைத்து உணவுப் பொருட்களையும் கொடுத்துள்ளேன். இதுவரை அதற்கு ஒன்று ஆனதில்லை" என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில், நாய்க்கு ஏற்படும் பாதிப்பானது உடனே தெரியாது. திடீரென்று என்றாவது தேவையில்லாமல் உடல்நலம் சரியில்லாத போது தான் உணர்வீர்கள்.

* நாய்கள் சைவமாக இருக்க முடியாது.

உண்மையில், நாய்கள் சைவமாக இருக்க முடியும். அதிலும் அதற்கு சரியான உணவுகளை கொடுத்து வந்தால். இறைச்சியில் மட்டும் தான் நாய்களுக்கு வேண்டிய சத்துக்கள் இருக்கும் என்றில்லை. அவற்றிற்கு புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள சரியான சைவ உணவுகளை தொடர்ச்சியாக கொடுத்தாலே, நாய்கள் இறைச்சி சாப்பிடாமல், சைவ நாயாக இருக்கும்.

* நாய்களுக்கான ஃபார்முலா உணவுகள் அனைத்தும் ஒன்று தான்.

மனிதர்களுக்கான அனைத்து ஃபார்முலா உணவுகளும் ஒன்றா? இல்லையெனில், நாய்களுக்கு மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். எப்போதும் நாய்களுக்கு வாங்கும் உணவுப் பொருட்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் சத்துக்கள் சரியானதாக இருந்தால் மட்டும் வாங்க வேண்டும். ஒருவேளை குறைவாக இருந்தாலும், வேறொரு உணவுப் பொருட்களை தேர்ந்துதெடுத்து வாங்கலாம்.

* வீட்டில் சமைக்கும் உணவுகள் தான் எப்போதும் நல்லது.

 இதுவும் ஒரு மூடநம்பிக்கை தான். உண்மையில் வீட்டில் சமைக்கும் உணவுகளின் மூலம் மட்டும் நாய்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. அதற்கும் ஒருசில ஃபார்முலா உணவுகளை தினமும் கொடுத்தால் தான், நாய்க்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.