Author Topic: ~ தம்பதிகளுக்கான பொழுதுபோக்குகள் ~  (Read 936 times)

Offline MysteRy

நடனம்
வாழ்க்கைத் துணையோடு நேரத்தை செலவிட நடனம் சிறந்த வழியாகும். இது இருவரின் கெமிஸ்ட்ரியை மேம்படுத்தும். மேலும் மனதுக்கு சந்தோஷத்தை அளித்து, உடம்பையும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். சல்சா (Salsa), ஜைவ் (Jive), ரும்பா (Rumba), டாங்கோ (Tango) போன்ற நடனத்தில் எது வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.


Offline MysteRy

சமைப்பது
சமைப்பது ஒரு கலை. அந்த கலையை துணையோடு சேர்ந்து வித விதமாக சமைத்து பார்க்கலாம். இதனால் இருவரும் நேரத்தை ஒன்றாக செலவிடலாம். வேண்டுமெனில் இணையதளத்தில் தேடி பார்த்து புது வகை உணவு வகைகளை சமைக்கலாம். மனதுக்கு அமைதி தரும் இந்த பொழுதுபோக்கில் மூழ்கி போவீர்கள்.


Offline MysteRy

புகைப்பட கலை
நினைவுகளை சிறைப்படுத்தும் சிறந்த வழி புகைப்படங்களே. ஏன் இருவரும் புகைப்பட கலையில் ஈடுபடக்கூடாது? ஒரு கருப்பொருள் கொண்டு அதன் வழி புகைப்படங்களை எடுத்து மகிழுங்கள். சமயத்தில் இருவரும் ஜோடியாக சேர்ந்து படங்களை எடுத்து சந்தோஷப்படுங்கள், இந்த படங்களை பார்க்கும் போது, கண்டிப்பாக காதல் உணர்வு பொங்கும்.


Offline MysteRy

மெழுகுவர்த்தி
மெழுகை உருக்கி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, வர்ணம் பூசி, புது புது வடிவமைப்பில் மெழுகுவர்த்தி செய்வது ஒரு கலை. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வீட்டிலேயே மெழுகுவர்த்தி செய்து, அந்த மெழுகுவர்த்தியை பயன்படுத்தவும் செய்யலாம். இல்லையென்றால் இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்காகவும் பயன்படுத்தலாம்.


Offline MysteRy

புத்தகம்
இருவருக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் இருந்தால், இந்த பொழுதுபோக்கு உங்களுக்காக தான். படுக்கப் போகும் முன் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகத்தை படித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்.


Offline MysteRy

விளையாட்டு
விளையாட்டு நம்மை ஆரோக்கியத்தோடு வைப்பது மட்டுமல்லாது, மனதுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும். துணையோடு சேர்ந்து விளையாடுவதை விட, வேறு என்ன சிறந்ததாக இருக்க முடியும். அதிலும் இறகு பூ பந்தாட்டம், நீச்சல், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம்.


Offline MysteRy

தோட்டக்கலை
வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து ஈடுபடும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு தான் தோட்டக்கலை. வீட்டின் வெளியே ஒரு தோட்டம் ஒன்றை உருவாக்கி, அங்கே தோட்டக்கலையை பயிற்சி செய்யலாம். பல வகையான அலங்கார செடிகளை வளர்த்து தோட்டம் பூத்து குலுங்குவதை சேர்ந்து ரசிக்கவும்.


Offline MysteRy

திரைப்படம்
நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த இந்த ஒரு பொழுதுபோக்கு போதும். வீட்டில் இருவரும் சேர்ந்து படம் பார்க்கலாம். இதற்காக தனியாக எந்த முயற்சியும் எடுக்க தேவையில்லை. இணையதளத்தில் கூட படங்களை பார்த்து மகிழலாம்.


Offline MysteRy

கேனோயிங்
கேனோயிங் என்பது சிறிய படகை ஆற்றில் ஓட்டுவது. இது ஒரு ஓய்வு நேர பொழுதுபோக்காகும். இது மன அமைதியை தரும். எனவே துணையோடு சேர்ந்து இந்த பிரமாதமான செயலில் இறங்கலாம்.


Offline MysteRy

சிப்பி மற்றும் சங்கு சேர்த்தல்
கடற்கரையிலிருந்து பல வகை சங்கு மற்றும் சிப்பிகளை சேர்ப்பதும் ஒரு வகை பொழுதுபோக்கே. இதுவும் அமைதியான ஒரு பொழுதுபோக்கு. சொல்லப்போனால் கடற்கரையில் சேர்ந்து நேரம் செலவிட அதிக வாய்ப்பை அளிக்கும். இவைகளை நினைவுப் பொருட்களாக பாதுகாத்தால் என்றும் பசுமையோடு இருக்கும்.