Author Topic: குடைமிளகாய் சட்னி  (Read 660 times)

Offline kanmani

குடைமிளகாய் சட்னி
« on: June 20, 2013, 11:41:37 AM »

    குடைமிளகாய் -ஒன்று
    தக்காளி - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 3 பல்
    காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
    புளி - நெல்லிக்காய் அளவு
    உளுந்து - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    புதினா, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
    எண்ணெய், சீரகம் - தாளிக்க

 

 
   

வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். குடைமிளகாயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
   

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுந்து தாளிக்கவும்.
   

உளுந்து பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
   

பின்பு புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கி ஆறவிட்டு, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
   

சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.